கோவையில் குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது!
கோவை மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காகச் சின்ன வேடம் பட்டி பகுதியைச் சேர்ந்த அன்பு மகன் அஜித் வீரன் (25) என்பவர் மீது அன்னூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் மேற்படி நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரை செய்தார்.
அதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
உத்தரவின்படி வழிப்பறி வழக்கின் குற்றவாளியான அஜித்வீரன் (25) என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
மேலும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தாலோ, பொதுச் சுகாதார பராமரிப்பிற்குப் பாதகமாகச் செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளார்.