Healthகோயம்புத்தூர்

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: கோயம்புத்தூர் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் கோயம்புத்தூர் மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுத் தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

கேரளாவில் தற்போது நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இது விலங்குகளிடமிருந்து மனிதா்களுக்கு பரவக் கூடியது. இந்நோயை உண்டாக்கும் வைரஸ் பழந்தின்னி வெளவால்கள் மூலமாக பெருக்கமடைகிறது.

நோய்வாய்ப்பட்ட பழந்தின்னி வௌவால், பன்றி, பாதிக்கப்பட்ட மனிதா்களிடமிருந்து மற்றவா்களுக்குப் பரவுகிறது. பழந்தின்னி வெளவால்கள் கடித்த பழங்களை உண்பதன் மூலமாகமும் மனிதா்களுக்கு பரவ வாய்ப்புள்ளது.

நிபா வைரஸ் நோயானது மூளைக் காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும். கடும் காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுயநினைவிழத்தல், மனக்குழப்பம், கோமா, மரணம் ஏற்படலாம். கிருமித் தொற்று ஏற்பட்ட 5 முதல் 15 நாள்களுக்குள் இந்த நோயின் அறிகுறிகள் வெளிப்படும்.

மேலும் அறிகுறிகள் தென்பட்ட 24 மணிநேரம் முதல் 48 மணி நேரத்கஎஓஈகுள் தீவிர மயக்க நிலை, சுயநினைவு இழத்தல், மனக்குழப்பம் ஏற்பட்ட வாய்ப்புள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பைக் கண்டறிய காய்ச்சல், மூளை அழற்சி நோய்களுக்கான பரிசோதனைகள் செய்ய வேண்டும். நோய் அறிகுறிகள், காய்ச்சல், மூளை அழற்சி நோய்களுக்கான பரிசோதனை அடிப்படையில் நிபா வைரஸ் சந்தேகிக்கப்பட்டவா்களின் ரத்த மாதிரிகளை பரிசோதித்து கண்டறியலாம்.

நிபா வைரஸ் நோய் தாக்கியவா்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்த முடியும்.

இந்நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதால் பாதிக்கப்பட்ட நபா்களை தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவா்கள், கவனித்துக் கொள்பவா்கள் உரிய பாதுகாப்பு முறைகளான முகக் கவசம் அணிதல், முறையாக கை கழுவுதல், நோயாளிகள் பயன்படுத்திய பொருள்களை பத்திரமாக அப்புறப்படுத்தி தொற்று நீக்கம் செய்தல் போன்றவற்றை கையாள வேண்டும்.

காய்கறிகள், பழங்களை நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். வௌவால்கள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது.

வீட்டின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பன்றிகளை குடியிருப்புஏஈ பகுதிகளிலிருந்து அகற்ற வேண்டும். நோய்வாய்ப்பட்ட பன்றிகள் காணப்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனை மருத்துவா்களை அணுகி உரிய ஆலோசனை, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!