கோயம்புத்தூர்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி (ம) வாசிப்பாளர் உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!

மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பவண்குமார் க.கிரியப்பனவர் தகவல்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவமாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 1ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு பட்டமேற்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐடிஐ மற்றும் ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித் தொகையும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு 9 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாசிப்பாளர் உதவித் தொகை வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே இத்திட்டத்தின் கீழ் 2025-2026 ஆம் கல்வியாண்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கல்வி பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவ,மாணவியர்களிடமிருந்து கல்வி உதவித் தொகை பெறுவதற்காக இ-சேவை மையத்தில் இணையதளம் (online) மூலம் 20.07.2025க்குள் உரிய சான்றிதழ்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மருத்துவ சான்றிதழ், Bonafide Certificate ஆதார் அட்டை நகல் UDID Card நகல், ரேசன் கார்டு 9ஆம் வகுப்பிற்கு மேல் பயிலும் மாணவர்கள் முந்தைய ஆண்டு இறுதி தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீதம் (அ) அதற்கு மேல் பெற்றுள்ள மதிப்பெண் அட்டை நகல். வங்கி கணக்கு புத்தக நகலுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர் பயன்பெற விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இக்கல்வி உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் வேறு துறையின் மூலம் கல்வி உதவித் தொகை பெற்றிருக்கக் கூடாது மாவட்ட ஆட்சித்தலையர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!