கோயம்புத்தூர்செய்திகள்

கோவை மாநகராட்சி கவுன்சில் நியமனக்குழு உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளி மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மனு!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன குழு உறுப்பினர் பதவி வழங்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி களில்  13000 நியமன பதவிக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது.

100 கவுன்சிலர்களைக் கொண்ட கோவை மாநகராட்சியில் ஒரு மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்காக இதுவரை காளிமுத்து, அமீர் ஆகிய 2பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று மாற்றுத்திறனாளிகள் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஐ.யு.டிபி. சங்கர் ராஜ் (வயது 43) மாநகராட்சி கவுன்சில் இடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.  அவருடன் பொதுச்செயலாளர் தேவ கோவிந்தராஜ், பொருளாளர் சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதுகுறித்து பேசிய சங்கர் ராஜ், கோவை மாநகராட்சி நியமன குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டால் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்.  

ஏற்கனவே எங்கள் அமைப்புமூலம் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்திற்கு பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. வெற்றி பெற்றதும் அனைத்து முன்னேற்றத்துக்கான பணிகளையும் செய்யப் பாடுபடுவேன் என்றார்.

வேட்புமன தாக்கல் செய்ய வருகிற 15ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!