அனுமதியற்ற மனைப்பிரிவுகள் வரன்முறைபடுத்த நவ.30 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைபடுத்த நவ.30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதள மூலம் பதிவு செய்யலாம்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், 2025-2026 ஆண்டிற்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அறிவிப்பு எண்5- 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு முன்பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்தகாலக்கெடுவும் இல்லாமல் மனுபெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்வாறு தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 0107.2025 முதல் onlineppa.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
மேலும் அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன் முறைப்படுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 30.06.2026 வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்து 15.05.2025 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் அரசாணை எண்.70 மூலம் உத்தரவிடவிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01072025 முதல் www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதுபோன்று மலையிடப் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை www.tnhillarealayoutregin என்ற இணையதளத்திற்கு பதிலாக 0107.2025 முதல் 30.11.2025 வரை www.cponlinein.gov.in என்ற இணையதளம் வாயிலாகவே தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.