பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட முன்னோடிகளுக்கு நினைவு அரங்கம் – அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, நீர்வளத்துறையின் கண்காணிப்புப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் பரம்பிகுளம் ஆழியாறு திட்டத்தினை நிறைவேற்றக் காரணமாகயிருந்த பெருந்தலைவர் கு.காமராஜர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனிச்சாமி கவுண்டர் முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலதிபர் திரு.பொள்ளாச்சி நாமகாலிங்கம், ஆகியோர்களுக்கு திருவுருவச் சிலையுடன் நினைவ அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை இன்று(08.07.2025) தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்தஆய்வின்போது பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.ஈஸ்வரசாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் திருபவன்குமார் க.கிரியப்பனவர் பொள்ளாச்சி நகர்மன்ற தலைவர் சியாமனா நவநிதிகிருஷ்ணன், பொதுப்பணித்துறை (கட்டிட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) செயற்பொறியாளர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தெரிவித்ததாவது,
மிகப்பெரிய பாசனத்திட்டங்களில் ஒன்றான பரம்பிகுளம் ஆழியார்பாசனத் திட்டம் உருவாக்கப்பட்டபோது பொறுப்பில் இருந்த தலைவர்களான அன்றைக்கு முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராசர், ஒன்றிய முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.கே.பழனிச்சாமி கவுண்டர், பொள்ளாச்சிநா.மகாலிங்கம் அவர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க திருவருச்சிலையும், அரங்கமும், கட்டப்பட்டு வருகின்றன.
இந்த அரங்கத்தின் கீழ்தனம் விவசாயிகள் கருத்தரங்குகள் நடத்துவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் ஆழியாறு பாசன திட்டம் குறித்து இளைய சமூகத்தினர், விவசாயிகள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தற்கான மதிப்பீடு ரூ.4.28 கோடிஆகும். ஆழியாறு பாசனத் திட்டம் மிக முக்கியமான திட்டமாகும். இப்பகுதி மக்களின் உயிர்நாடியாக இருக்கின்றது. இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டது. இப்பணிகள் விரைந்து முடிவற்று பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
மேலும், இத்திட்டம் உருவாக காரணமாக இருந்த இவர்கள் அனைவரையுடைய திருவருவச்சிலைகளும் அமைக்கப்பட்டு, ஆழியார் தினத்தன்று அன்னார்களது திருவுருவச் சிலைகளுக்கு அரசின்சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், அதேநாளின் ஏற்கனவே வால்பாறையில் அமைக்கப்பட்டுள்ள திரு.ரான்அவர்களின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும்.. மேலும், பி.ஏ.பி கால்வாய் திட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கான மணிமண்டமும் கட்டப்பட்டு வருகின்றது.
இந்த மணிமண்டபம் அமைக்கும் பணிகளும் விரைவில் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். என மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்ச ர்திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தெரிவித்தார்.