படத்தின் கதை கோவையில் தான் எழுதப்பட்டது – இயக்குனர் ராம்
” பறந்து போ ” படத்தின் வணிக ரீதியான பெரிய வெற்றி, படங்களுக்கான இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்ற கதவுகளைத் திறந்து வைத்து இருக்கின்றது என இயக்குனர் ராம் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இனி பேய் படங்களும் எடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்..
கோவை விமான நிலையத்தில் “பறந்து போ” திரைப்படத்தின் இயக்குனர் ராம் மற்றும் நடிகர் சிவா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது இந்தப் படத்தின் கதை எழுதப்பட்டது கோவையில் தான் எனவும், முதல் நாள் சூட்டிங் கோவையில் தான் இருந்தது ,கோவை சுற்று வட்டார பகுதியில் இந்தப் படம் எடுக்கப்பட்டு தற்போது வெற்றியாக உருவெடுத்து இருக்கிறது எனத் தெரிவித்தனர்.
உலகம் முழுவதும் இந்தப் படம் வெற்றி அடைந்து இருக்கிறது எனவும், இந்தப் படத்தை வெற்றிப்படமாகக் கொடுத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், புதிய முயற்சிகளை ஆதரித்துக் கொண்டு இருக்கும் மக்களுக்கு நன்றி எனவும் தெரிவித்தார்.
எப்பொழுதும் சீரியஸாக இருக்கும் ராம் எப்படி ? இது போன்ற கலகலப்பான படத்தை எப்படி ? எடுக்க முடிந்தது என்ற கேள்விக்கு, கோவையால் தான் கலகலப்பான படத்தைத் தன்னால் கொடுக்க முடிந்தது, எனவும் இங்கு இருக்கும் மக்களால் தானென இயக்குனர் ராம் பதில் அளித்தார்.
எந்த ? நடிகர் வந்தாலும் அவருடைய பலம் கதையில் வர வேண்டும் எனத் தெரிவித்த அவர், சிவாவை இதில் பயன்படுத்தி இருக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
நான்கு படம் தான் எடுத்து இருக்கிறன், ஐந்தாவது படமாக பறந்து போப்படத்தை எடுத்து இருக்கிறோம், பேய் படம் எல்லாம் இனி எடுப்போம் எனவும் இயக்குனர் ராம் தெரிவித்தார்.
இந்த முறை படம் பெரிய வெற்றி அடைந்து இருப்பதால், வருங்காலத்தில் படம் எடுக்கும் இடைவெளி கண்டிப்பாக இனி கண்டிப்பாகக் குறைந்து போகும் என இயக்ககுனர் ராம் தெரிவித்தார்.
நடிகர் சிவாவும் இதே கோரிக்கையை இயக்குனர் ராமிடம் முன் வைத்தார். அப்போது அதிகப்படியான படங்களை இயக்க வேண்டும் எனவும் நடிகர் சிவா, இயக்குனர் ராமிடம் கேட்டுக் கொண்டார்.
அதற்குப் பதில் அளித்த இயக்குனர் ராம் “பறந்து போ” நிறைய படங்கள் செய்ய வேண்டும் என்பதை தொடங்கி வைத்து இருக்கிறது, வணிக ரீதியான பெரிய வெற்றி அந்தக் கதவுகளைத் திறந்து வைத்து இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
உண்மையில் குழந்தைகள் பெற்றொர்கள் சேர்த்து பார்க்கும் படம் எனவும், வாழ்க்கையை கொண்டாட, சொல்கின்றது பறந்து போத்திரைப்படம் எனவும் இயக்குனர் ராம் தெரிவித்தார்.