மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம்: வரும் 09 ஆம் தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடக்கம்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோயம்புத்தூர் சார்பாக எதிர்வரும் 09.07.2025 முதல் 15.07.2025 வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன்வாரம் மற்றும் 15.07.2025 அன்று உலக இளைஞர் திறன் நாள் (World Youth Skills Day) அனுசரிக்கப்படுவதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள், மகளிர், கலை, அறிவியல், பொறியியல் கல்லூரி. பாலிடெக்னிக், தொழிற்பயிற்சி நிலைய மற்றும் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி, போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சிவகுப்பு, மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் பதிவுசெய்தல், மென்பாடங்களை தரவிறக்கம் செய்தல், கல்வி தொலைக்காட்சி, Youtube channel TN Career Services Employment மற்றும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இவ்வலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக அரசுப் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சிவகுப்புகள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்ட இளைஞர்கள் இந்நிகழ்ச்சி மற்றும் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்குக் கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க. கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.