மக்கும், மக்கா குப்பை என தரம் பிரித்து கொடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் – மாநகராட்சி ஆணையாளர்
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து கொடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவழுத்தினார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு,மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தூய்மைப்பணிகள் சாலைப்பணிகட்டுமானப் பணிகள் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன் படி, மேற்கு மண்டலம் மருதமலை சாலை பகுதியில் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் பணியாளர்களின் வருகை பதிவேட்டினையும் மற்றும் வார்டு எண்.37க்குட்பட்ட மருதமலைச் சாலை, வட மருதம் நகர் பகுதியில் அமைத்துள்ள மாநகராட்சிப் பூங்காவினை மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பூங்காவினை முறையாகப் பராமரித்திட அலுவர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.37க்குட்பட்ட மருதமலைச் சாலை, வடவள்ளி மருதம் நகர் விரிவு மற்றும் மாசாணியம்மன் அவென்யூ மற்றும் வார்டு எண்.6க்குட்பட்ட மருதமலைச் சாலை, வடவள்ளி ஆகிய பகுதிகளில் மாநகராட்சித் தூய்மைப் பணிகள் குடியிருப்புப் பகுதிகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காக் குப்பைகளைத் தரம் பிரித்துச் சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையார், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு குப்பைகளை மக்கும் குப்பை மக்காக் குப்பையெனத் தரம் பிரித்துக் கொடுக்குமாறுப் பொதுமக்களுக்கு அறிவறுத்தினார்
முன்னதாக, மருதமலைச் சாலை, வள்ளி பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சி குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுப் பணி முடிவுற்ற இடங்களில் சேதமடைந்த சாலையினை உடனடியாகச் சீர் செய்ய மாநகராட்சி ஆணையாளர் தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் வார்டு எண் 36க்குட்பட்ட மருதமலைச் சாலைப் பகுதியில் பொதுமக்களுக்குச் சீரான இடைவெளியில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதை நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, மருதமலைப் பகுதியில் சாலைகளில் மைய தடுப்புகளில் படித்துள்ள மணல் குப்பைகளை மாநகராட்சி பணியாளர்கள்மூலம் அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுப், பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவார்களுக்கு அறிவுறுத்தினார்.