Top Storiesஅரசியல்தமிழ்நாடு

பள்ளிக் குழந்தைகள் விஷயத்தில் ஒன்றிய அரசு அரசியல் செய்யக் கூடாது – அன்பில் மகேஷ்

கோவை கிக்கானிக் பள்ளியில் மாநில அளவிலான அடைவு ஆய்வு – 2025  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் 5 வட்டங்களுக்கு உட்பட அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளியில் படிக்கும், மாணவர்கள் கற்றல் திறன்குறித்து கடந்த பிப் மாதத்தில் நடத்தப்பட்ட ஓ.எம்.ஆர் தாள்மூலம் தேர்வில் மாணவர்கள் கற்றல் திறன் எப்படி உள்ளது.

குறைவாக உள்ள மாணவர்களின் கற்றல் திறனை எவ்வாறு மேம்படுத்து என்பது குறித்து பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்து ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கா.கிரியப்பவனர், மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், மற்றும் 5 கல்வி வட்டங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெரும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

*பள்ளிக்கு மத அடையாளங்களும் வர அறிவுறுத்தும் இவர் தான், நீட் தேர்வுக்கு வரும்போது தாளியை கூடக் கழற்ற அறிவுறுத்துகின்றனர்*

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: சென்னையில் முதன்மை கல்வி அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தினோம், தொடர்ந்து மாவட்ட வாரியாகச் சென்று தலைமை ஆசிரியர்களைச் சந்தித்து ஆய்வு செய்து வருகிறோம்.

கோவையில் மேற்கொண்ட ஆய்வில் தொண்டாமுத்தூர் உள்ளிட்ட சில பள்ளிகள் சற்று பின் தங்கியிருந்தது தெரியவந்தது.  மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

இருப்பினும், மனப்பாடம் செய்து படிப்பதை விட மாணவர்கள் புரிந்து படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் என்பதற்காக இந்த ஆய்வு நடக்கிறது. குறை சொல்லும் கூட்டம் அல்ல கலந்தாய்வு செய்து திறன் வளர்ப்பை மேம்படுத்த மட்டுமே.

பள்ளி கல்வி துறை ஒவ்வொரு பள்ளிக்கான ரிப்போர்ட் கார்டை கொடுத்துள்ளோம்.  தமிழகம் முழுவதும் 9.80 லட்சம் மாணவர்களிடம் கற்றல் திறன் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளைத் தாண்டிப் புரிந்து படித்துள்ளார்களா? என்பதை அறிந்து கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 850 ஆய்வகங்கள் சீரமைக்க நிதி ஒதுகீடு செய்யப்பட்டுள்ளது.  அதிநவீன ஆய்வகம் அமைப்பதற்கான ஒப்பந்த கோரும் நடவடிக்கைகளை நிதி துறை கவனித்து வருகிறது.

மேலுல் இதனை யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம். கட்டாய கல்வி உரிமை சட்ட வழக்கு தொடர்பாகச் சிறப்பு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளோம்.

ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை உண்மை தான் தமிழ்நாடு நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தனியார் பள்ளிகளில் ஏழை எளிய குழந்தைகள் படிப்பற்கான ஒரு சட்டம் ஒன்றிய அரசு அதற்கும் பணம் கொடுக்க மறுக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு நிதி வழங்குவதற்கு முன்னதாகவே, அவர்களது பங்கையும் சேர்த்து  தமிழ்நாடு அரசு நிதி வழங்கும் பின்னர் அந்த நிதியைப் பெற்றுக்கொள்வோம்.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக அவ்வாறு தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.600 கோடியைக் கூட ஒன்றி அரசு வழங்கவில்லை. அவர்களை நம்பி நாம் வழங்கிய நிதியைக் கூடக் கொடுக்க மறுக்கிறார்கள்.

பள்ளி குழந்தைகள் விஷயத்தில் அரசியல் பார்ப்பது வருத்தமளிக்கிறது. மிக விரைவாகச் சிறப்பு மனு தாக்கல் செய்தபின் கட்டாய கல்வி உரிமைக்கான போர்டல் திறக்கப்படும்.

ஒவ்வொருத்தருக்கு மதம் சார்ந்த கருத்து உள்ளது. பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு முற்போக்கு கருத்துக்களை கூற வேண்டும். அதைவிட மத அடையாளங்களுடன் வர வேண்டும் எனக் கருத்து கூறுவதை பின்போக்கு தனம் எனக் கூறினேன். நம்பிக்கையில் யாரும் தலையிடப் போவதில்லை.

அதைக் கட்டாயபடுத்த கூடாது என்கிறோம். மதம் சார்ந்து நிற்கிறோம் எனக் கூறும் இவர்கள் நீட் தேர்வின்போது தாளியை கூடக் கழற்றி வைக்கக் கூறுகிறார்கள், அங்கொன்றும், இங்கொன்றும் பேசக் கூடாது என்பது எனது கருத்து எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!