கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு – விவசாயிகள் ஆட்சியரிடம் மனு

கோவை சூலூர் தாலுக்கா அவினாசிபாளையம் விவசாய நிலங்களில் நடைபெற்ற வரும் ஐ.டி.பி.எல் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை, சாலையோரத்திற்கு மாற்றியமைக்க வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.   

கோவை இருகூரில் இருந்து கர்நாடகா மாநிலம் தேவன்குந்தி வரை சுமார் 355 கிலோ மீட்டர் தொலைவிற்கு, ஐ.டி.பி.எல் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 70 கிலோ மீட்டர்வரை விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு இக்குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் நடவடிக்கைகளைக் கைவிட்டு, மாற்றாகச் சாலை ஓரங்களில் மட்டுமே குழாய்களைப் பதித்த வேண்டும் என விவசாயிகள்  கோரிக்கை வைத்தனர்.

இருப்பினும் எரிவாயு குழாய் அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்ற வருகிறது. இதனைக் கண்டித்து கடந்த 200 நாட்களுக்கு மேலாகச் சூலூர் அவினாசிபாளையம் பகுதி விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் விவசாய நிலங்களில் குழாய் பதிக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு அளித்துள்ளனர்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைத் தீர்ப்பு கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் மீண்டும் தங்கள் கோரிக்கைகள்குறித்து மனு அளித்தனர். மேலும் தங்கள் கோரிக்கைகளைப் பதாகைகளாக எடுத்து வந்து வலியுறுத்தினர். 

இதுகுறித்து பேசிய விவசாயி கிருஸ்ணவேனி: கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகச் சாலையோரமாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த  போராடி வருகிறோம். 

இது சம்பந்தமாகக் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தமிழக அமைச்சர்கள்  மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் மத்திய துறை செயலாளர் பிபிசிஎல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோர சந்தித்து மனு கொடுத்திருக்கிறோம்.

இந்தக் குழாய்களைச் சாலையோரமாக அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து திட்டத்தையும் நிறைவேண்டும்.  இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் நிலங்களுக்கான கடன் பெற முடிவதில்லை. 

விவசாயிகள் விட்டுக் கொடுத்த நிலங்களில் தான் வளர்ச்சியே வந்துள்ளதாகவும் இனிமேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் எங்கள் உயிரை மாய்த்துக் கொள்வோம்  தெரிவித்தனர்.    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!