பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை மறு கட்டமைக்க (மிஷன் ஒயிட் வேங்) பயிற்சி – பால்வளத்துறை அமைச்சர்
தமிழ்நாட்டில் முதல்முறையாகச் சோதனை அடிப்படையில் (Pilot Program) ஆவின் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய மிஷன் ஒயிட் வேங் திட்டம்குறித்த பயிற்சி பட்டறையினை பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம் ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் இன்று (27.06.25) தமிழ்நாட்டில் முதல்முறையாகச் சோதனை அடிப்படையில் (Pilot Program) ஆவின் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய மிஷன் ஒயிட் வேல் திட்டம்குறித்த பயிற்சி பட்டறையினை பால்வளத்துறை அமைச்சர் தமனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
பின்னர் பால்வளத்துறை அமைச்சர் தமனோ தங்கராஜ் பேசியதாவது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாய பெருமக்களுக்குக் கால்நடைகள் வாங்குவதற்கான கடன்கள் கால்நடைகள் பராமரிப்புக்கு வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் 9232 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.
இவை அனைத்தையும் இலாபத்தில் இயங்குகின்ற சங்கங்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற இந்த நான்கு ஆண்டுகளில் 351 புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. செயலிழந்த 483 சங்கங்களை புதியதாகச் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
கலைக்கப்பட்ட 650 சங்கங்கள் மீட்டு எடுக்கப்பட்டுள்ள 2484 சங்கங்கள் புதியதாகச் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. இதன்மூலம் குறைந்தபட்சம் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய பெருங்குடிமக்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும், 1385 சங்கங்கள் செயல்படாத சங்கங்களாக இருந்து வருகின்றன. இவற்றை மறுகட்டமைப்பு செய்வதற்காக இரத்தினம் கல்வி குழுமம் குமரகுரு கல்விக்குழுமம் ஆகிய இரண்டு கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்தும் வகையில் இத்திட்டத்தின் மூலம் அவர்களுடைய நிறுவனங்களில் எம்பிஏ பயிலும் மாணவர்களைத் தேர்வு செய்து, முறையாகக் கூட்டுறவு சங்கங்கள்பற்றிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
நலிவுற்ற சங்கங்கள்பற்றிய விவரங்களைச் சமூக பகுப்பாய்வு செய்து, 3 மாத காலத்திற்கு அவர்களுடன் இணைந்து செயலாற்றி அந்தச் சங்கங்களை இலாபகரமான சங்கங்களாக மறுகட்டமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளின் எண்ணிக்கை என்ன காரணத்தினால் குறைந்தது. விவசாயிகள் பால் வழங்குவது ஏன் குறைந்தது. அவர்களுக்குப் போதுமான வருமானம் இல்லையா நிலத்தில் விளைச்சல் இல்லையா உள்ளிட்ட காரணிகளை ஆய்வு செய்து, இந்தப் பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்க முடியுமென்று விவசாயிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும்.
மேலும், வணிக உத்திகளைக் கவனிக்க வேண்டும். எடுத்துக்கட்டாக ஒரு பகுதி ஊரகமாக இருந்து தற்போது நகரப்பகுதியாக மாறி இருக்கும். எனவே, அங்கு விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கும். வணிக வியாபாரம் அதிகரித்து இருக்கும்.
இந்த மாதிரி இடங்களை ஆவின் விற்பனையினை அதிகரிக்க பயன்படுத்திக்கொள்ளலாம் இத்திட்டம் வெற்றிபெறும்போது தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ளது. இதனால் பால் உற்பத்தியும் பால் பொருட்களிode விற்பனையும் ஆவின் செயல்பாடும் அதிகரிக்கும்.
இத்திட்டத்தினால் ஆவினில் உள் சிறந்த கற்ற அனுபவம் வாய்ந்த அலுவலர்களுக்கு ஒரு சிறந்த உத்வேகமாகவும். ஆர்வமுள்ள மாணவர்களுக்குப் புதியவற்றை கற்றுக்கொள்வதற்கும் இது மிகச்சிறந்த பயிற்சியாக இருக்கும் என பால்வளத்துறை அமைச்சர் திருதமனோ தங்கராஜ் தெரிவித்தார்.