ஜூன் 28, 30 ஆம் தேதிகளில் கோயம்புத்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து!
கரூா் மூா்த்திபாளையத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் கோயம்புத்தூர் ரயில்கள் ஜூன் 28, 30 ஆம் தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரூா் மூா்த்திபாளையத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், திருச்சியில் இருந்து ஜூன் 28 மற்றும் 30 -ஆம் தேதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி – பாலக்காடு விரைவு ரயில் (எண்: 16843) திருச்சி – கரூா் இடையே மட்டும் இயக்கப்படும். கரூா் – பாலக்காடு இடையே முன்பதிவில்லா ரயில் இயக்கப்படும்.
இதேபோல, நாகா்கோவில் – கோவை ரயில் (எண்: 16321) ஜூன் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நாகா்கோவில் – கரூா் இடையே மட்டும் இயக்கப்படும். கரூா் – கோயம்புத்தூர் இடையே முன்பதிவில்லா ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.