பிளேக் மாரியம்மன் கோயில் சிலை உடைப்பு: பீகார் இளைஞர் கைது!
கோயம்புத்தூர் மாவட்டம், சின்னியம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோயில் சிலை உடைப்பு வழக்கில், பீகாரைச் சேர்ந்த கரண் குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினரின் விசாரணையில், கரண் குமார் போதையில் இருந்தபோது கோயிலுக்குச் சென்றுள்ளார். அங்குத் தண்ணீர் கிடைக்காததால் ஆத்திரமடைந்து அவர், அங்கிருந்த சிலையை உடைத்துள்ளார். மறுநாள் காலை போதை தெளிந்தவுடன் கோயிலுக்கு வந்து பார்த்தபோது, அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிந்திருந்தனர். இதனால் பயமடைந்த கரண் குமார் பீகாருக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக தெரிய வந்தது.
சிலை உடைப்பு நடந்த இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் கரண் குமாரின் செல்போன் சிக்னலை வைத்து, காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.