கோவையில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா அதிமுக முன்னாள் அமைச்சர் SP வேலுமணி பங்கேற்பு!
கோவை பேரூர் பகுதியில் நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு முருகன் சிலை வழங்கி வரவேற்றார்.
கோவை பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா மற்றும் பேரூர் ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ் மொழியில் மந்திரங்கள் ஓத “பாரம்பரிய சிவ வேள்வியில்” ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து வளாக அரங்கில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் எஸ்.பி.வேலுமணி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் எஸ்.பி.அன்பரசன், இந்து அமைப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழா மேடைக்கு வந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை எஸ்.பி.வேலுமணி வெள்ளி முருகன் சிலை கொடுத்தும், எஸ்.பி.அன்பரசன் வெள்ளி வேல் கொடுத்தும் வரவேற்றனர்.
மேலும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, எஸ்.பி.வேலுமணியைச் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்