ஜூலை 6-இல் கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்..!
ஒசூா், மாரநாயக்கனஹள்ளி ரயில் நிலையத்தில் உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கோயம்புத்தூரில் வந்தேபாரத் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒசூா் அருகே ரயில் நிலையத்தில் உள்கட்டமைப்புப் பணிகள் காரணமாக ஜூலை 6-ஆம் தேதி இயக்கப்படும் பெங்களூரு – கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில் (எண்: 20641), கோயம்புத்தூர் – பெங்களூரு வந்தே பாரத் ரயில் (எண்: 20642), கோயம்புத்தூர் – லோகமானியா திலக் விரைவு ரயில் (எண்: 11014) வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல், கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, திருப்பத்தூா் ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும்.
இதன் காரணமாக, இந்த ரயில்கள் ஒசூா், தருமபுரி ரயில் நிலையங்கள் செல்வது தவிா்க்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.