சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மண் கொண்டு சீரமைத்த காவல் ஆய்வாளர்கள் – பொதுமக்கள் பாராட்டு
கோவை உக்கடம் – சுங்கம் சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று கொண்டுள்ளது.இந்நிலையில் அந்த சாலையில் மாநகராட்சி பணிகளுக்காகக் குழிகள் தோண்டப்பட்டுள்ளது.
பணிகள் முடிவடைந்த பின்பு அந்த குழிகள் சரியாக மூடப்படாததால் அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் அடிக்கடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த ரேஸ்கோர்ஸ் காவல் ஆய்வாளர் கந்தசாமி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் களத்தில் இறங்கி பொதுமக்களின் சிரமத்தைப் போக்கச் சாலையில் நடுவே ஏற்பட்ட பள்ளங்களை மண் கொண்டு சீரமைத்தனர்.
பல நாட்களாக மூடப்படாத பள்ளத்தைச் சீரமைத்த காவலர்களுக்குப் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாகச் சாலையில் உள்ள பள்ளங்களைச் சீரமைத்த காவலர்களின் செயல்கள் சமூகத்தில் நல்லெண்ணத்தையும், காவல்துறையினர் மீதான மரியாதையையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.