மர்ம விலங்கு தாக்கி 2 ஆடுகள் பலி!
கோவை வாளையாறு, மொடமாத்தி கிராமத்தில் புகுந்த மர்ம விலங்கு தாக்கி விவசாயி தோட்டத்திலிருந்த இரண்டு ஆடுகள் பலியானது.
கோவை – கேரளா எல்லையான வாளையாறு வனப்பகுதி அருகே உள்ள மொடமாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் கவுதம் விவசாயி. இவர் தனது வீட்டில் ஆடுகள், மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு அவரது பட்டியில் கட்டி வைத்திருந்த 3 ஆடுகளை மர்ம விலங்கு தாக்கிச் சென்றது. இதில் 2 ஆடுகள் உயிரிழந்தது. ஒரு ஆடு படுகாயங்களுடன் தப்பியது. இது குறித்து கவுதம் மதுக்கரை வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அப்பகுதியில் சிறுத்தை கால் தடம் உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டறியக் கண்காணிப்பு கேமராவை பொருத்திக் கவனித்து வருகின்றனர்.