சங்கனூர் சாலைகள், பாரதி நகர் உள்ளிட்ட 16 இடங்களில் சாலை சீரமைக்கு பணி துவக்கம்..!
கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் ரூ.156.63 இலட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சித்திட்டப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் ஆகியோர் முன்னிலையில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி.பராஜ்குமார், இன்று (18.06.2025) துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் இன்றைய தினம் (18.06.2025) வடக்கு மண்டலம், வடக்கு மண்டலம், வார்டு எண்.20 மற்றும் 30-க்குட்பட்ட சங்கனூர் பிரதான சாலைகள், பாரதி நகர் சாலைகள் உட்பட 16 எண்ணிக்கையிலான சாலைகளை ரூ.142.13 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகளை மேயர் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் முன்னிலையில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர், துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, கிழக்கு மண்டலம், வார்டு எண்.6-க்குட்பட்ட கருப்பராயன்பாளையம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில், சுதந்திர தின பங்களிப்பு நிதியிலிருந்து ரூ.14.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மையத்தினை (ICDS) மேயர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் முன்னிலையில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர், திறந்து வைத்தார்.