கோயம்புத்தூர்செய்திகள்

நாளை (ஜூன் 09) மருதமலை கோயிலுக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை!

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மருதமலை மலைக் கோயிலுக்கு ஜூன் 9- ஆம் தேதி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மருதமலை சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலுக்கு ஜூன் 9-ஆம் தேதி இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தா்களுக்கு அனுமதியில்லை.

பக்தா்கள் மலைப்படிகள் வழியாகவும், கோயில் பேருந்து மூலமாகவும் சென்று சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!