தமிழ்நாடு

வேளாண் பல்கலை. மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க ஜீன் 08- ஆம் தேதி கடைசி நாள்

ஒருங்கிணைந்த இளமறிவியல் மாணவர் சேர்க்கை 2025 – 2026 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

இந்த கல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும் (TNAU) மற்றும் வேளாண்மைப் பிரிவு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் (AU) ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளுக்கும் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 3 இளமறிவியல் வேளாண் பாடப்பிரிவுகளுக்கும் ஒருமித்த வகையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 6921 (அரசாங்க கல்லூரிகளுக்கு 2516 இடங்களும் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு 4405 இடங்களும் = 6921 இடங்கள்) மற்றும் வேளாண்மைப் பிரிவு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் 340 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்..

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டயப்படிப்புகளுக்கு 1240 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த இடங்களுக்கு இதுவரை 1309 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 09.05.2025 முதல் இணையதள வாயிலாக http://tnau.ucanapply.com இந்த ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தைப் பெற்று வருகிறது. பூர்த்தி செய்த இந்த ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு 08.06.2025 இறுதி நாளாகும்.

02.06.2025 இன்று வரை, இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மொத்தம் 31,545 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களும் மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு 1690 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணையதளத்தில் பெறப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்வி பாடங்களுக்கான விவரங்களை 9488635077, 9486425076 என்ற அலைபேசி எண்களிலும் மின்னஞ்சல் (email) : ugadmissions@tnau.ac.in மூலமாகவும் வாரநாட்களில் காலை 9.00 மணியிலிருந்து மாலை 5 மணிவரை தொடர்புகொள்ளலாம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ( வேளாண்மைப் பிரிவு)
அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வி பாடங்களுக்கான விவரங்களை 9865703537 மற்றும் 9442029913 என்ற அலைபேசி எண்களிலும், மின்னஞ்சல் (email) : agridean2015@gmail.com மூலமாகவும் வாரநாட்களில் காலை 10.00 மணியிலிருந்து மாலை 6 மணிவரை தொடர்புகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!