கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை வாய்ப்பு…!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து கோயம்புத்தூர் மாவட்டம் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது :
தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) ல் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியக் கோயம்புத்தூர் பகுதியில் விண் வரவேற்கப்படுகிறது.
மேற்படி இதற்கான விண்ணப்பங்கள் கே இணையதள முகவரி https://coimbatore.nic.in யில் உரிய படிவம் மற்றும் பணியிடம் மற்றும் தகுதிகள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காண் இணையதள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரியில் 30.06.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
