அரசியல்கோயம்புத்தூர்பொழுதுபோக்கு

விஜய் குறித்த கேள்வி: எனக்கு நிறைய வேலை இருக்கு என்று பதில் கூறிய சூரி

திரைப்படங்கள் பணி காரணமாக தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க முடியாது என்றும், அவர் கட்சி பணியைச் சிறப்பாகச் செய்து வருவதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

மாமன் திரைப்பட நடிகர் சூரி கோயம்புத்தூர் அவினாசி சாலை சிட்ரா பகுதியிலுள்ள திரையரங்கிற்கு வந்து ரசிகர்களைச் சந்தித்தார். பின் செய்தியாளர்களைச் சந்தித்தவர்,

மாமன் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருவதாகவும், தவிர்க்க முடியாத உறவான தாய் மாமன் உறவை மையப்படுத்தி என்ன நினைத்து திரைப்படத்தை எடுத்தோமோ , அனைவருக்கும் connect ஆகும் என்ற நினைத்த மாதிரி நடந்துள்ளதாக சில சம்பவங்களைச் சுட்டிக்காட்டியவர், முதல் பாதி சிரிப்பு, சந்தோஷம், 2 ஆம் பாதி அழுகை வரும் வகையில் உணர்வுகளை மையப்படுத்தி திரைக்கதை உள்ளதாகத் தெரிவித்தார்.

பெரியவர்கள் தாய்மார்களுக்கு மட்டுமின்றி இளைஞர்களுக்கு இந்த திரைப்படம் பிடித்தது மகிழ்ச்சி ,
இந்த படம் மனஸ்தாபம் கொண்ட உறவுகளைச் சந்திக்க தோணும், மீண்டும் உறவுகளை இணைய வேண்டும் என்று தோன்றும் என்றவர், செல்போன்கள் தனிமையான உலகத்தை உருவாக்கும் ஆபத்தைக் கொண்டது எனவும், தேவையானவற்றுக்கு மட்டும் செல்போன் பயன்படுத்தி நண்பர்களே உறவினர்களுடன் நேரத்தைக் கழிக்க வேண்டும் என்றார்.

குடும்ப படங்கள் மிகவும் குறைந்து அளவு வெளிவருகிறது என்றவர், குடும்பத்திற்காகக் கடவுளிடம் சென்று வேண்டலாம், திரைப்படத்திற்காகச் செய்யும்போது குடும்பத்துக்கு மன வேதனை ஏற்படுத்தும் என்பதால் மண் சோறு சாப்பிட வேண்டாம் எனக் கூறியதாகவும், ரசிகர்கள் இனிமேல் இவ்வாறு செய்ய மாட்டார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

எனக்குப் பொருத்தமான, சொல்ல வேண்டிய கதை என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் எனக்கு வெற்றியைத் தருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க நிறைய ஆசை உள்ளது, எனக்காகக் கதை வைத்திருப்பார் என நம்புவதாகத் தெரிவித்தார்.

கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு நான் உதாரணம் என்றும், ஓடிடி இருந்தாலும் திரையரங்கத்துக்கு வரும் மக்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றனர், விழா போலத் தனது படத்திற்கு ஆதரவு இருப்பதாகத் தெரிவித்தார்.

தனது உணவகம் மக்கள் ஆதரவுடன் சிறப்பாகப் பல கிளைகள் திறக்கும் அளவுக்கு நடந்து வருவதாகத் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!