தமிழ்நாடு

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை சென்னையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (மே.16) வெளியிட்டார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 5 முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றன.

அதன்படி, 10 வகுப்பு தேர்வு முடிவுகளை சென்னையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று காலை 9 மணியளவில் வெளியிட்டார்.

10ம் வகுப்பில் ஒட்டுமொத்தமாக 93.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவியர் 95.88 சதவீதமும், மாணவர்கள் 91.74 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதே போல் மூன்றாம் பாலினத்தவர்கள் – 100%, தனித்தேர்வர்கள் – 40.46%, சிறைவாசிகள் – 97.05% தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டைவிட மொத்த தேர்ச்சி விகிதம் 2.25% அதிகரித்துள்ளது. இருப்பினும், வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவியர் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விகிதத்தின்படி, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி ஆகிய மாவட்டங்கள் முதல் ஐந்திடத்தில் உள்ளன.

அரசுப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற முதல் ஐந்து மாவட்டங்களிலும் சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, திருச்சி, தூத்துக்குடி மாவட்டங்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.

பாடவாரியாக தேர்ச்சி விகிதம்:

தமிழ்: 98.09%
ஆங்கிலம்: 99.46%
கணிதம்:96.57%
அறிவியல்:97.90%
சமூக அறிவியல்: 98.49%

பாடவாரியாக சதம் அடித்தவர்கள் எண்ணிக்கை:

தமிழ்: 8
ஆங்கிலம்: 346
கணிதம்: 1996
அறிவியல்: 10838
சமூக அறிவியல்: 10256 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in http://www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் அறியலாம். பள்ளி மாணவர்கள், தனி தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படும்.

மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!