கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர்: நாளை (மே-16) தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மே 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

மே மாதத்துக்கான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் மே 16-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

இதில், 10, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்துத் தரப்பினரும் தங்களின் சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்துகொள்ளலாம்.

இம்முகாமில் தோ்வு செய்யப்படும் தோ்வா்களுக்கு வேலைக்கான உறுதி கடிதம் உடனடியாக வழங்கப்படும். பணிநியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இதில் பங்கேற்க வயது வரம்பு இல்லை. அனுமதி இலவசம்.

எனவே, முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் வேலைதேடுவோா் இணையதளங்களில் பதிவு செய்துகொள்ளலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0422 – 2642388, 94990 – 55937 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!