காவலாளிக்கு ரூ.1 இலட்சம் பணம் கொடுத்து உதவிய விஜய் கட்சியினர்..!
கோயம்புத்தூரில் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் விஜய் பார்க்க இளைஞர்கள் முந்தியடித்து சென்ற போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு – வில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்ட காவலாளிக்கு தவெக – வினர் பணம் கொடுத்து உதவி செய்தனர்.
கோயம்புத்தூர் குரும்பபாளையம் அடுத்த தனியார் கல்லூரியில் கடந்த மாதம் தமிழக வெற்றி கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் 2 நாட்கள் நடைபெற்றது.
தினமும் 5000 முதல் 10 ஆயிரம் பேர் வரை கூட்டத்தில் கலந்து கொண்டனர். கட்சியின் தலைவர் விஜய் இதில் கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சியைத் தொடங்கி வைத்து அவரும் கூட்டத்தில் பங்கு பெற்றார்.
விஜய் வருகை முன்னிட்டு ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள், கல்லூரி அருகே திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரியில் வாயிற் கதவுகள் தள்ளுமுள்ளு எற்பட்டதில் சரிந்து விழுந்து ரசிகர்கள் உள்ளே நுழைந்தனர்.
அப்போது பணியிலிருந்த காவலாளி அன்புச்செழியன் கூட்டத்தில் சிக்கியதில், அவருடைய இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனால் அவர் பணிக்கு வர முடியாது சூழல் ஏற்பட்டதால் குடும்ப நிலை மற்றும் அவருடைய உடல் நிலையைக் கருத்தில் கொண்டு விஜய் கட்சியைச் சேர்ந்த மாநகர மாவட்டச் செயலாளர் சம்பத்குமார் ஒரு லட்ச ரூபாய் பணத்தைக் காவலாளிக்கு நேரில் சென்று கொடுத்தனர்.