பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி: 9 தீவிரவாத முகாமை அழித்த இந்திய இராணுவம்
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மீது இந்தியா இன்று புதன்கிழமை அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது.
நள்ளிரவு 1.44 மணிக்குப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு “ஆபரேஷன் சிந்தூர்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலைத் தொடர்ந்து நீதி நிலைநாட்டப்பட்டது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல், நீதி நிலைநாட்டப்பட்டது. “ஜெய் ஹிந்த், ஆபரேஷன் சிந்தூர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது