காஷ்மீர் தாக்குதல்: அனைத்து மதத்தினர் அஞ்சலி..!
கோயம்புத்தூரில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் என அனைத்து மதத்தினர் இணைந்து காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் உயிரிழந்தவர்களுக்கு “கலாச்சார நட்புறவுக் கழகம்”, “பல்சமய நல்லுறவு இயக்கம்”, “தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தினர்” சார்பில், அனைத்து மதத்தினரும் ஒன்றாக இணைந்து மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் உயிரிழந்த மக்களின் உருவப் படங்களுக்கு மலர் தூசி இரங்கலைத் தெரிவித்த நிலையில் இந்தியாவில் மதம் ஒற்றுமை எப்படி உள்ளது என்பது குறித்துப் பேசினர்.
இது குறித்துப் பேசிய பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரபீக்: நாடு சமாதானம் பக்கம் தான் உள்ளது. 140 கோடி மக்கள் ஒற்றுமையாக உள்ள இந்த நாட்டில் சிலர் மத நல்லினத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படுகின்றனர், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாகத் தான் இருக்கிறோம்.