கோயம்புத்தூர்தமிழ்நாடு

பராமரிப்பு பணிகளுக்காக கோயம்புத்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து!

கோயம்புத்தூர் – போத்தனூா் இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோயம்புத்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பராமரிப்பு பணிகள் காரணமாக மே 1 முதல் 15-ஆம் தேதி வரை பாலக்காடு – கோயம்புத்தூர் ரயில் (எண்: 66606), பொள்ளாச்சி – கோயம்புத்தூர் ரயில் (எண்: 56110), ஷொரணூா் – கோயம்புத்தூர் ரயில் (எண்: 56604) போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில்கள் 15 நாள்களும் போத்தனூா் – கோயம்புத்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

மே 1 முதல் 15-ஆம் தேதி வரை மேட்டுப்பாளையம் – போத்தனூா் ரயில் (எண்:66611) மேட்டுப்பாளையம் – கோயம்புத்தூர் இடையே மட்டும் இயக்கப்படும். கோயம்புத்தூர் – போத்தனூா் இடையே ரத்து செய்யப்படுகிறது.

மதுரை – கோயம்புத்தூர்ரயில் (எண்: 16722) மே 1 முதல் 5-ஆம் தேதி வரை, மே 9 முதல் 15-ஆம் தேதி வரை மதுரை – போத்தனூா் இடையே மட்டும் இயக்கப்படும். மேலும், மே 6 முதல் 8-ஆம் தேதி வரை மதுரை – கோவை ரயில் (எண்: 16722) மதுரை – பொள்ளாச்சி வரை மட்டுமே இயக்கப்படும். பொள்ளாச்சி – கோயம்புத்தூர்இடையே ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, கோயம்புத்தூர்- கண்ணூா் ரயில் (எண்: 16608) மே 1 முதல் 5-ஆம் தேதி வரை, மே 9 முதல் 15-ஆம் தேதி வரை போத்தனூரில் இருந்து புறப்படும்.

கோயம்புத்தூர் – போத்தனூா் இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோயம்புத்தூர்ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கேரள ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்:
பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக மே 1 முதல் 15-ஆம் தேதி வரை பாலக்காடு – திருச்சிராப்பள்ளி ரயில் (எண்: 16844), ஆலப்புழை – தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352), எா்ணாகுளம் – பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678) போத்தனூா், இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், கோவை, வடகோவை, பீளமேடு ரயில் நிலையத்துக்குச் செல்வது தவிா்க்கப்படும்.

திருவனந்தபுரம் – மும்பை விரைவு ரயில் (எண்: 16332) மே 3, 10 ஆகிய நாள்களில் போத்தனூா், இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், கோயம்புத்தூர், வடகோவை, பீளமேடு ரயில் நிலையத்துக்குச் செல்வது தவிா்க்கப்படும்.

திருநெல்வேலி – பிலாஸ்பூா் விரைவு ரயில் (எண்: 22620) மே 4, 11 ஆகிய தேதிகளிலும், எா்ணாகுளம் – பிலாஸ்பூா் விரைவு ரயில் (எண்: 22816) மே 7, 14 ஆகிய தேதிகளிலும் போத்தனூா், இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!