EconomyTop Storiesஇந்தியா

ஏடிஎம்-யில் ரூ.100, ரூ.200 நோட்டுகள் கட்டாயம் – ஆர்பிஐ அதிரடி

மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் ஏடிஎம் இயந்திரங்களில் போதுமான அளவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பெரும்பாலும் ரூ.500 நோட்டுகளே நிரப்பப்படுகிறது. ஆனால் சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் கிடைப்பதில்லை.

இதனால் மக்களிடையே ரூ.100 மற்றும் ரூ.200 பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

அனைத்து வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் போதுமான அளவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.

செப்டம்பர் 30-க்குள் அனைத்து வங்கி ஏடிஎம் இயந்திரங்களிலும் 75 சதவிகிதம் ரூ.100, ரூ.200 நோட்டுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், 2026 மார்ச் மாதத்திற்குள் ஏடிஎம் இயந்திரங்களிலும் இதனை 90 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்.

எடிஎம் இயந்திரங்களில் அதிகளவில் ரூ.500 நோட்டுகள் மட்டும் விநியோகிக்கப்படுவதால் அதனை ரூ.100, ரூ.200 நோட்டுகளாக மாற்றுவதற்கு மக்கள் சிரமங்களை சந்திக்கும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளின் பணப்புழக்கத்தை மக்களிடையே அதிகப்படுத்தும் விதமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!