விஜய் வருகை: த.வெ.க நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு
த.வெ.க தலைவர் விஜய் வருகையை முன்னிட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், 2 வழக்குகளும், திமுக கொடியைச் சேதப்படுத்தியதாக 2 நிர்வாகிகள் மீதும் பீளமேடு காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், கோவையில் 2 நாட்கள் நடைபெறும் வாக்குச் சாவடி முகவர்களுக்கான பயிற்சி கருத்தரங்கில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நேற்று கோயம்புத்தூர் வந்தார். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் அவரை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் திரண்டு இருந்தனர்.
இதனால் விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் விமான நிலைய வளாகத்திலிருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டது. சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை ஓட்டிச் சென்றுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
இது தொடர்பாகக் கோவை பீளமேடு காவல்துறை நிலையத்தில் தமிழக வெற்றி கழக கட்சியினர் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் சம்பத் உள்ளிட்ட சிலர் வழக்குப் பதிவு செய்தனர். மொத்தம் 133 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையினை முன்னிட்டு விமான நிலையம் சாலையில் திமுகவினர் வைத்திருந்த, திமுக கொடியினை சேதப்படுத்தியதாகவும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாகக் கோயம்புத்தூர் காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் பீளமேடு காவல்துறை நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில், நடிகர் விஜய் கட்சி நிர்வாகிகளான திண்டுக்கல் செல்லமுத்து மற்றும் ஒட்டன்சத்திரம் மனோஜ் குமார் மீதும் 2 பிரிவுகளில் பீளமேடு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்