தவெக தலைவர் விஜய் வருகை – கோவை விமானநிலையத்தில் குவிந்த தொண்டர்கள்
தவெக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க வரும் விஜயை வரவேற்கக் கோவை விமான நிலையத்தில் குவிந்த தவெக தொண்டர்கள், ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாட்டம்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் பூத் கமிட்டி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள தவெக தலைவர் விஜய் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.
இதையடுத்து கோவை செல்வதற்காகக் கட்சியின் தலைவர் விஜய், சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து விமான நிலையம் புறப்பட்டார்.
தவெக தலைவர் விஜய் வருவதையொட்டி கோவை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்