Top Storiesஇந்தியா

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: முதலமைச்சர் கண்டனம்

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

’’ஜம்மு – காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. கடும் கண்டனத்துக்குரியது. அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடந்த தாக்குதலில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அடங்குவார்கள் என்ற செய்தி வருத்தமளிக்கிறது.
ஜம்மு – காஷ்மீர் அதிகாரிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய உதவிகளைச் செய்யத் தமிழ்நாடு சார்பில் தில்லியில் உள்ள ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!