தந்தையை ஆம்புலென்ஸில் அழைத்து வந்த மகன் – நிலத்தை மீட்டு தரக்கோரி மனு
கோயம்புத்துர்: சுயநினைவு இல்லாத 96 வயது தந்தையிடம் மூத்த மகன் எழுதி வாங்கிய நிலத்தை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தி தந்தையை ஆம்புலென்ஸில் அழைத்து வந்து இளைய மகன், மகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர், பட்டணம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (96). இவருக்கு ஜெயக்குமார், வேல்முருகன் என்ற இரண்டு மகன்களும் சரஸ்வதி என்ற ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக சுய நினைவு இன்றி உள்ள பழனிச்சாமிக்குச் சொந்தமான சுமார் 2 1/4 செண்ட் நிலத்தை மூத்த மகன் ஜெயக்குமார் தனது பெயரில் எழுதி வாங்கியதாகவும், அதனை மீட்டுக் கொடுக்க வேண்டும் எனக் கோரி, இளைய மகன் வேல்முருகன், மகள் சரஸ்வதி இருவரும் பழனிச்சாமியை ஆம்புலென்ஸில் அழைத்து வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.