அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சோனியா, ராகுல் மீது அமலாத்துறை வழக்கு – ஆனந்த் சீனிவாசன் பேட்டி..!
நேசனல் ஹெரால்ட் பத்திரிகை தொடர்பாக சோனியா, ராகுல் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அமலாக்கத் துறையால் இந்த வழக்குப் போடப்பட்டு இருப்பதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்தார்.
கோயம்புத்தூர் பிரஸ் கிளப்பில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சீனிவாசன், ஆய்வு பிரிவு பொறுப்பாளர் அமிதாப் துபே ஆகியோர் நேசனல் ஹெரால்ட் பத்திரிகை தொடர்பான வழக்கு குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய அவர்கள் கூறியதாவது : நேசனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா ராகுல் ஆகிய இருவரும் எந்த தவறும் செய்ய வில்லை, இந்த வழக்கைத் தொடுத்த சுப்பிரமணிய சாமி வழக்கைத் திரும்பப் பெற்றுவிடுவார் என்ற அச்சத்தில் இந்த வழக்கை தற்போது விரைவு படுத்துகின்றனர்.
இந்த வழக்கில் உரிய நியாயம் கிடைக்கும் எனத் தெரிவித்த அவர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்ட இந்த வழக்கு குறித்து மத்திய பா.ஜ.க அரசு, அமலாக்கத் துறை ஆகியவற்றுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றோம்.
அறக்கட்டளைகளால் ஆரமிக்கப்பட்ட கம்பெனி என்றால் அதில் தனிப்பட்ட நலன்களைச் செய்ய முடியாது.
இதில் பணபரிவர்த்தை ராகுல், சோனியா பெயரில் இல்லலை, அதில் இருந்து எந்த பலன்களையும் பெறவில்லை, பண பரிவத்தனைகள் இல்லை எனில் இதில் அமலாக்கத் துறைக்கு என்ன வேலை? அதானி மீது அமெரிக்கா வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அவர்களிடம் ஏன் அமலாக்கத்துறை விசாரிக்க வில்லை. தமிழகத்தில் அண்ணாமலை, நயினார் பேச்சைக் கேட்காதவர்களையும், இந்திய அளவில் மோடி பேச்சைக் கேட்காதவர்கள் மீதும் அமலாக்கத் துறை பயன்படுத்தப்படுகின்றது.
அமலாக்க துறை தொடுக்கும் 100 வழக்குகளில் 95 வழக்குகள் தோற்று இருக்கின்றது.சுப்பிரமணிய சாமியே மோடிக்கு எதிராக மாறிவிட்டார், இந்த வழக்கை அவர் நடத்த மாட்டார் என்பதால் ஒன்றிய அரசு இதைக் கையில் எடுத்து இருக்கின்றது. அமலாக்க துறை வைத்து அதிமுகவை மிரட்டுவதாக இணைய ஊடகங்களில் செய்திகள் ஏராளமாக இருக்கின்றது.
எடப்பாடி பழனிச்சாமி ஏன் கூட்டணியை அறிவிக்க வில்லை, தமிழகத்தில் அமலாக்கத் துறை விளையாடுகின்றது.,
அதிமுக பெரிய கட்சியா ? பா.ஜ.க பெரிய கட்சியா? நேசனல் ஹெரால்ட் பத்திரிகையினை விற்கப் போவதில்லை எனக் கட்சி சொல்லி இருக்கின்றது. சட்டரீதியாக இந்த வழக்கை எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்தனர்.