வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்!
வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி ,கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, மனிதச் சங்கிலி போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் ஈடுபட்டனர். இதில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வக்பு திருத்தச் சட்டம் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாகக் கோவை உக்கடம் அன்பு நகர் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்பு நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடியானது ஏற்றப்பட்டுள்ளது . மேலும் சாலைகளிலும் கருப்பு கொடியினை ஏற்றிய எஸ்டிபிஐ கட்சியினர் , மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைகளில் கருப்பு கொடி ஏந்தியபடி மனிதச் சங்கிலி மத்திய அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட எஸ் டி பி வி கட்சியினர், வக்பு திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் இஸ்லாமியர்களின் உரிமைகளை எந்த ஒரு சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் எனவும் தெரிவித்த அவர்கள், மத்திய அரசு இந்த சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்