புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவர்கள் சிறப்புப் பிரார்த்தனை ஊர்வலம்!
புனித வெள்ளியை முன்னிட்டு கோயம்புத்தூர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் ஏசு உடல் மற்றும் சிலுவையை சுமந்தவாறு சுமார் 500- க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாக கிறிஸ்து மக்களால் அனுசரித்து வருகின்றனர். 45 நாட்கள் தவக்காலமாக விரதம் இருந்து, புனித வெள்ளியன்று சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் புனித வெள்ளியை முன்னிட்டு கோவையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் இன்று பிரார்த்தனை நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாகக் கோயம்புத்தூர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள “பரிசுத்த தமத்திருத்துவ தேவாலயத்தில்” புனிதவெள்ளி பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது 250 கிலோ மற்றும் 500 கிலோ எடை கொண்ட இரண்டு சிலுவைகளையும், உயிர் நீத்த ஏசு கிறிஸ்து உடலையும் ஊர்வலமாகக் கொண்டுச் சென்றனர்.
தேவாலயத்திலிருந்து அல்வேனியா பள்ளி வரை சென்ற இந்த ஊர்வலத்தில் குழந்தைகள், பெண்கள் என சுமார் 900 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து உயிர் நீத்த ஏசு உடலுக்கு கிறிஸ்துவர்கள் அஞ்சலி செலுத்தினர்.