தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலிக்கு நன்றி – தமிழ்நாடு முஸ்லீம் கல்வி இயக்கம்…!
கோவையில் நடைபெற்று வரும் இரண்டாவது மாநில உயர் கல்வி மாநாட்டில், தமிழகத்தில் சிறுபான்மை சமூகத்திற்குக் கல்வி ரீதியாகத் தமிழ்நாடு அரசு செய்து வரும் நலத்திட்டங்களுக்கும், தமிழ்நாடு முதல்வருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
“தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்” சார்பில், இஸ்லாமிய மாணவர்களுக்கான இரண்டாவது மாநில உயர் கல்வி மாநாடு கோவை குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பள்ளிக் கல்வி முடித்த இஸ்லாமிய மாணவர்கள் அடுத்தகட்டமாக என்ன படிக்கலாம் என்பது குறித்து கல்வியாளர்கள், அறிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் இந்த மாநாட்டில் ஓய்வு பெற்ற நீதிபதி ஜியாவுதீன், மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில், மற்றும் கல்வியாளர்கள், கலந்து கொண்டனர். அதே போலத் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த இஸ்லாமிய மாணவர்களுக்கு மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இது குறித்து பேசிய தமிழ்நாடு முஸ்லீம் கல்வி இயக்கம் தலைவர் சலீம் கூறும் போது: கோவையில் மாநில அளவிலான உயர்கல்வி மாநாடு ஏற்பாடு செய்துள்ளோம், இதில் சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் வந்துள்ளனர். குறிப்பாகக் கோவையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு, கல்லூரி மாணவர்களுக்குப் பெருமளவு கலந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் எந்த இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும், ஆராய்ச்சி படிப்பு, தமிழகத்தின் ஆகச்சிறந்த ஆராய்ச்சியாளர்களாக முஸ்லீம் சமூக பிள்ளைகளை உருவாக்கும் நோக்கில் உயர் கல்வி ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசு எடுத்து வரும் மகத்தான நடவடிக்கைகளால் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலம் அடுத்த பத்தாண்டுகளில் மகத்தான பொருளாதார வளர்ச்சியடைய உள்ளது.
அந்த வளர்ச்சியின் முதுகெலும்பாகவும், தூண்களாகவும் , முஸ்லீம் சமூக பிள்ளைகளை உருவாக்கி எடுக்க இந்த மாநாடு கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் கல்வியாளர்கள், ஓய்வு பெற்ற நீதிபதி, விஞ்ஞானிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்,. மேலும் தமிழ்நாடு அரசு உயர் கல்வியில் வழங்கும் பல்வேறு வாய்ப்புகள், உதவித் தொகைகள், போட்டி தேர்வு வழிகாட்டல்கள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.
சிறுபான்மை சமூகத்திற்குத் தொடர்ச்சியாகத் தமிழ்நாடு அரசுக் கல்வி ரீதியில் செய்து வரும் நலத்திட்டங்களை மாணவர்களுக்கு வெளிப்படுத்துகின்றோம். அதற்குத் தமிழ்நாடு முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ச்சியாக முஸ்லீம் சமூகத்தினுடைய எல்லா நிலைகளை மேம்படுத்தி எடுப்பதற்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள்.
இன்னும் உயர் கல்வி , ஆராய்ச்சி ரீதியாகவும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருக்கக்கூடிய முஸ்லீம்களுக்குக் கலைஞர் காலத்தில் திமுக அரசு வழங்கிய இட ஒதுக்கீடு முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, முன்னேறிய சமூகமாக மாற அந்த வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது அதற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.