ரீல்ஸ் எடுத்த இளைஞர்கள் பைக் பறிமுதல் – மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்..!
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் ,ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞர்களின் 3 இரு வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இளைஞர்கள் மன்னிப்பு கேட்கும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் மூன்று பேர் இருசக்கர வாகனத்தை அதி வேகமாக இயக்கி செல்வதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. நெடுஞ்சாலை ரோந்து படையினரும், கருமத்தம்பட்டி காவல் துறையினரும் அதி வேகமாக வாகனத்தை இயக்கிய இளைஞர்கள் மூன்று பேரையும் பிடித்துக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த சஞ்சய் ,டிக்ஸன் மற்றும் தமிழ் நாதன் என்பது தெரிய வந்தது. இவர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருவதும் மூன்று பேரும் நண்பர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மூன்று பேரின் முகவரியினை பெற்றுக்கொண்ட காவல் துறை அவர்களுக்கு அபராதம் விதித்ததுடன் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தனர்.
ஆனால் இளைஞர்கள் காவல் நிலையத்திற்கு வந்து சென்றதை ரீல்ஸ் ஆகப் பதிவிட்டு, அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த சமூக வலைத்தள காட்சிகளைப் பார்த்த கோவை கருமத்தம்பட்டி காவல்துறையினர் மீண்டும் அந்த இளைஞர்கள் மூன்று பேரையும் அழைத்து அவர்கள் மீது பொது மக்களின் உயிருக்கு ஆபத்தை
ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கியதாக வழக்குப் பதிவு செய்ததுடன், மூன்று பேரின் இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மூன்று இருசக்கர வாகனங்களும் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இளைஞர்களின் பெற்றோர் வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து மூன்று இளைஞர்களும் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் இளைஞர்கள் மூன்று பேரும் தங்கள் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் இரு சக்கர வாகனங்களை வேகமாக இயக்கியதும் காவல் நிலைய வளாகத்தில் ரீல்ஸ் பதிவிட்டு அதை பகிர்ந்ததும் தவறு என உணர்ந்திருப்பதாகவும் எங்களைப் பார்த்து யாரும் இப்படிச் செய்யாதீர்கள் என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளன