Top Storiesதமிழ்நாடு

ஜான் ஜெபராஜ் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்கு மூலம் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது – மாநகர காவல் ஆணையர்

மத போதகர் ஜான் ஜெபராஜ் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையளித்த வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த 164 பிரிவு வாக்கு மூலம் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் தெரிவித்தார்.

கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் திறந்த வெளி காத்திருப்போர் இடத்தை மாநகர காவல் ஆணையாளர் சரவணசுந்தர் திறந்து வைத்தார். மேலும் இந்த இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழக அரசுத் திட்டமான இலவச WiFi வசதியையும் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் கூறும் போது: புகார் அளிக்க வரும் பொது மக்களுக்காகக் காத்திருப்போர் இடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் திட்டமான இலவச WiFi வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணைய வழியாகப் புகார் அளிப்பதற்கு இதனைப் பயன்படுத்தலாம். இது அரசுத் திட்டம் என்பதால் தைரியமாக இதனைப் பயன்படுத்தலாம்.

இந்துஸ்தான் கல்லூரி மாணவி தற்கொலை குறித்து துணை ஆணையர் தலைமையில், முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது.

மத போதகர் ஜான் ஜெபராஜ் வழக்கில் சிறுமி அளித்த 164 பிரிவின் கீழ் சிறுமி அளித்த எழுத்துப்பூர்வமான வாக்கு மூலத்தின் அடிப்படையில் பெனட் கைது செய்யப்பட்டுள்ளார். வேறு யாரும் இந்த வழக்கில் இல்லை எனவும், வேறு நபர்கள் யாரையும் சிறுமி குறிப்பிடவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும் காவல் நிலையங்களில் இளைஞர்கள் ரீல்ஸ் எடுப்பது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர் பொதுமக்களும் இளைஞர்களும் ரீல்ஸ் மோகத்தில் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!