கோயம்புத்தூர்: சுந்தராபுரம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!
கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட கோண்டி காலனி பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் 97-வது வார்டு உட்பட்ட சுந்தராபுரம் கோண்டி காலனி பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி இட்ட பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று (16.04.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி தெற்கு மண்டலம். சுந்தராபுரம் வார்டு எண் 7-க்கு உட்பட்ட கோண்டி காலனி பகுதியில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மலை கிராம மக்கள் பல வருடங்களாக வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கூட்டுவது தொடர்பாகவும் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி இட்டப் பணிகள் குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், இப்பகுதியில் குழந்தைகளை கட்டாயமாக பள்ளியில் சேர்க்க வேண்டும் எனவும் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டுமெனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து தெற்கு மண்டலம் வார்டு எண் 97-க்கு உட்பட்ட பிள்ளையார்புரம் சாலை கஸ்தூரி கார்டன் பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மாநகராட்சியின் சார்பில் ரூ.5. இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து பொதுமக்களுக்கு தண்ணீர விநியோகிக்கும் பணியினையும் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது துணை மேயர் வெற்றிசெல்வன், உதவி ஆணையர் குமரன், மாநகர கல்வி அலுவலர் தாம்சன், செயற்பொறியாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.