பார்வை மாற்றுத் திறனாளிகளான உதவித் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்!
பார்வை மாற்றுத் திறனாளிகளான உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோயம்புத்தூரில் பார்வை மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு சார்பில், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது ரூ.1,500 மாதாத்திற பராமரிப்பு உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் பொருட்களைப் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லாமல் வழங்க வேண்டும், அனைத்து வகை மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊர்திப் படி இரட்டிப்பாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலாம் முன்பு தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு, பார்வை மாற்றுத்திறனாளிகள் சுமார் 50 பேர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழக அரசால் வழங்கப்படும் உதவித் தொகை இப்போதைய விலைவாசிக்கு ஏதுவாக அல்ல, பார்வை மாற்றுத்திறனாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதால் தமிழ்நாடு அரசு விரைவில் உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், அரசாணை 20 -ன் முழு பயன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.
மேலும் தங்கள் கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அடுத்தகட்டமாக கையெழுத்திருக்கப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்