சீனாவில் சூறாவளி – உடல் எடை 50க்குள் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை
சீனாவில் கடுமையான சூறாவளிக் காற்று வீசிவரும் நிலையில், மக்களின் பாதுகாப்புக்காக, அங்கு பொது முடக்கம் மற்றும் உடல் எடை 50க்குள் இருப்பவர்கள் வெளியே வர வேண்டாம், போன்ற கடுமையான காட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங்கில், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பூங்காக்கள் மூடப்பட்டன. ரயில் சேவை பகுதியாக நிறுத்தப்பட்டு, விமானச் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும், உடல் எடை 50க்குள் இருப்பவர்கள் வெளியே வர வேண்டாம், காற்றில் அடித்துச் செல்லப்பட நேரிடும் என்றும் எச்சரித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி சீன அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். மேலும், 50 கிலோவுக்கும் கீழ் உடல் எடை இருப்பவர்களை, இந்த சூறாவளிக் காற்று எளிதாகத் தூக்கி வீசிவிடும் என்றும் சீன ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
சீன தலைவர் பெய்ஜிங்கில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
பல இடங்களில் கட்டடங்கள் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதாகவும் சீனாவில் கடந்த 10 ஆண்டுகளில் சூறாவளிக்காக, ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை, கடுமையான சூறாவளிக் காற்று காரணமாக ஒரே நாளில் திடீரென 13 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை திடீரென குறைந்துள்ளது. தற்போது மிக மோசமான வெப்பநிலை மாற்றத்தைச் சீனா அனுபவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது