கோயம்புத்தூர் தீயணைப்பு அலுவலகத்தில் தீத்தொண்டு நாள் அனுசரிப்பு!
தீத்தொண்டு நாளை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் “நீத்தார் நினைவு” தூணிற்குத் தீயணைப்புத் துறையினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1944-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி மும்பை துறைமுகத்தில் உள்ள ஒரு கப்பலில் தீப்பிடித்தது. இங்கு தீயணைப்புப் பணியில் ஈடுபட்ட, தீயணைப்பு வீரர்கள் சிலர், தீயில் கருகி வீரமரணம் அடைந்தனர்.இதைத் தொடர்ந்து, உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14-ம் தேதி தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தீத்தொண்டு நாளை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் உள்ள “நீத்தார் நினைவு தூணிற்கு” மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி, நிலைய அலுவலர்கள் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும் தீயணைப்பு பணிகளில் உயிரிழந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தீயணைப்பு பணிகள் மற்றும் வீர மரணம் அடைத்த வீரர்கள் குறித்துப் பேசினர்