காட்டூர் முத்துமாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் ”தனலட்சுமி அலங்காரம்”…!
சித்திரை திருநாளை முன்னிட்டு கோவை காட்டூர் அம்பால் முத்துமாரியம்மன் கோயிலில் ரூ.4 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள், தங்கநகைகளுடன் தனலட்சுமி அலங்காரத்திலிருந்த அம்மனை நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
கோயம்புத்தூர் காட்டூர் பகுதியில் 85 ஆண்டுகள் பழமையான அம்பாள் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருநாளை முன்னிட்டு அப்பகுதி மக்கள் வணிகர்கள் ஆகியோரிடம் ரூபாய் நோட்டுக்களைப் பெற்று அதனைக் கொண்டு அம்மனுக்குத் தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. பின்னர் விழா முடிந்த பிறகு அந்த பணத்தை மீண்டும் அதனை வழங்கிய மக்கள் மற்றும் வணிகர்களிடம் கொடுக்கப்படுகிறது அவ்வாறு அலங்காரத்திற்குப் பயன்படுத்திய ரூபாய் நோட்டுக்களை வணிகர்கள் வைத்திருந்தால் அவர்களுக்கு அதிகளவு வணிகம் நடக்கும் என்பது அதிகமாக வைத்துள்ளனர்.
ரூ.4 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள், தங்க நகைகளால் அலங்காரம்:
இந்த நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருநாளை முன்னிட்டு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வணிகர்களிடம் பெறப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்க நகைகளைக் கொண்டு அம்பாள் முத்து மாரியம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது இந்த அலங்காரத்திற்கு 500, 200, 100, 50, 20 ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தனலட்சுமி அலங்காரத்தில் உள்ள அம்மனை தரிசித்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற அதிகம் உள்ளதால் காலையிலிருந்து நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இது குறித்துப் பேசிய கோயில் அறங்காவலர் ஆனந்தகுமார் கூறும் போது : 85 ஆண்டுகளாக உள்ள இந்த கோயிலில் ஒவ்வொரு முறையும் விழா சாட்டும் போது மழை பெய்யும் அதேபோல் ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில் அம்மனுக்குத் தனலட்சுமி அலங்காரம் செய்யப்படும் இதற்காக வணிகர்கள் பொது மக்களிடம் பணம் தரப்பட்டு மீண்டும் அவர்களிடம் கொடுப்போம் அதனை வணிகர்கள் வைத்திருந்தால் அதிக லாபம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது இந்த ஆண்டு சுமார் ரு 4 முதல் 5 கோடி வரை ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்க நகைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
பொதுமக்கள் கூறும் போது : தமிழ் ஆண்டின் முதல் நாள் முத்துமாரியம்மன் தனலட்சுமி அலங்காரத்தில் பார்த்தால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் வந்து சாமி தரிசனம் செய்கிறோம் அதேபோல் புதிதாக நகை வாங்கினால் அதனையும் இந்நாளில் அம்மன் அலங்காரத்திற்குக் கொடுத்து அதனைத்திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் ஐதீகத்திற்கு ஏற்ப செல்வமும் உங்களுக்குப் பெறுகிறது எனத் தெரிவித்தார்.