தங்க விலை உயர்வு – மஞ்சள் கொம்பில் தாலி செய்த பொற்கொல்லர்…!
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கோயம்புத்துரைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவர், ஏழை மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மஞ்சள் கொம்பில் தாலி வடிவமைத்து கவனத்தை ஈர்த்துள்ளார்.
தங்கத்தின் விலை நாளுக்குத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,290 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.66,320 ஆக உள்ளது. இந்நிலையில் கோயம்புத்துரைச் சேர்ந்த யு.எம்.டி. ராஜா என்ற பொற்கொல்லர் ஒருவர் மஞ்சள் கொம்பில் தாலியை வடிவமைத்து கவனத்தை ஈர்த்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து தங்கம் என்பது ஏழைகளுக்கு எட்டாக் கனியாக உள்ளது. இனி வரும் காலங்களில் ஒரு கிராம் தங்கம் கூட வாங்க முடியாத சூழல் ஏற்படும், இதனைக் கருத்தில் கொண்டும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய மஞ்சள் கொம்பை வைத்து தாலியை வடிவமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் நகை தொழிலைச் செய்யும் பொற்கொல்லர் ஒருவரே மஞ்சள் கொம்பில் தாளி வடிவமைத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.