கோயம்புத்தூர்: பாதாளச் சாக்கடை திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்…
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் சாலை, பொம்மநாயக்கன்பாளையம், ஆர்.ஆர்.அவென்யூ பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்.
அதேபோல், வார்டு எண்.37க்குட்பட்ட மருதமலை சாலை, வடவள்ளி, பத்மா நகர் மற்றும் வார்டு எண்.35க்குட்பட்ட ஆட்டோ நகர் ஆகிய பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கப்பட்டு, சாலை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலருக்கு அறிவுறுத்தினார்.