பல்வேல் இடங்களில் புதிய நிழற்குடை அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அவினாசி சாலை கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரையில் அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தின் கீழ்ப் பகுதியின் இரு புறங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் புதிதாகப் பயணிகள் நிழற்குடை அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அவிநாசி சாலை, கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரையில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.1621.00 கோடி மதிப்பீட்டில், சுமார் 10.01 கி.மீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
அந்த வகையில், உயர்மட்ட பாலத்தில் ஆரம்ப பகுதியான அவிநாசி சாலையிலிருந்து 1.உப்பிலிபாளையம், 2.அண்ணாசிலை ஸ்டேன்ஸ் பள்ளி அருகில், 3.குப்புசாமி நாயுடு மருத்துவமனை. 4.லட்சுமி மில்ஸ், 5.நவஇந்தியா, 6.எஸ்.ஓ பங்க், 7.பீளமேடு, 8.கிருஷ்ணம்மாள் கல்லூரி, 9.வரதராஜா மில்ஸ், 10.ஜி.ஆர்.ஜி.பள்ளி, 11.கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, 12.ஜி.ஆர்.டி.கல்லூரி, 13.பி.எஸ்.ஜி.கலைக்கல்லூரி, 14.சித்ரா மற்றும் 15.கே.எம்.சி.ஹெச் ஆகிய 15 இடங்களிலும் மற்றும் கோல்டு வின்ஸ் முதல் கோயம்புத்தூர் சாலையிலான 1.கே.எம்.சி.ஹெச், 2.சித்ரா, 3.பி.எஸ்.ஜி.கலைக்கல்லூரி, 4.அரசு தொழிற்பயிற்சி கல்லூரி, 5.சி.ஐ.டி.கல்லூரி, 6.ஜெகன்நாதன் நகர், 7.ஹோப் காலேஜ், 8.வரதராஜா மில்ஸ். 9. ஃபன்மால், 10.கிருஷ்ணம்மாள் கல்லூரி, 11.பீளமேடு, 12.சுகுணா திருமண மண்டபம், 13.நவஇந்தியா, 14. லட்சுமி மில்ஸ், 15.குப்புசாமி நாயுடு மருத்துவமனை, 16.அண்ணாசிலை ஸ்டேன்ஸ் பள்ளி அருகில், 17.உப்பிலிபாளையம், ஆகிய 17 இடங்களான பேருந்து நிறுத்த பகுதிகளில் புதிதாக நிழற்குடை அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பயணிகள் பயன்பெறும் வகையில் நிழற்குடை நவீன வசதிகளுடன் அமைப்பது தொடர்பாக அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.