பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பென்சனர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்!
70 அகவைக்கு 10 சதவீத ஓய்வூதிய வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பினர், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார தலைவர் பிச்சை கணபதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது 70 அகவை அடைந்த ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியம் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டம் காசில்லாத மருத்துவ மருத்துவம் உருவாக்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை மூன்று லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். இ
ந்த ஆர்ப்பாட்டத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அ.ரங்கராசா, மாவட்ட தலைவர் இரா.சுப்ரமணியன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்