கலை கட்டிய ஹோலி பண்டிகை கொண்டாட்டம்…!
கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியில், வட மாநில மக்கள் வண்ணப்பொடிகளை தூவி, ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக ஹோலி பண்டிகையைக் கொண்டாடினர்.
வண்ணங்களின் திருவிழா என்று போற்றப்படும் ஹோலி பண்டிகை, வட மாநில மக்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் வண்ண வண்ண பொடிகளைப் பூசி ஹோலி பண்டிகையைக் கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூரில் வட மாநில மக்கள் அதிகமாக வசித்து வரும் ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால், பூமார்கெட் உள்ளிட்ட பகுதிகளில் வட மாநில மக்கள் உற்சாகமாக ஹோலி பண்டிகையைக் கொண்டாடினர். இதில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் வட மாநில மக்கள் வண்ண வண்ண பொடிகளைத் தூவி, ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக நடனமாடினர். இந்த கொண்டாட்டத்தில் வட மாநில மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் உற்சாகமாகக் கொண்டாடினர்.